தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. 7ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 9 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சரவனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 48,880க்கு விற்பனையானது. 15ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 49,080க்கும், ஒரு கிராம் ரூ. 6,135க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment