குறைந்து வரும் தங்கத்தின் விலை..

by Lifestyle Editor

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,125 ஆகவும், சவரன், ரூ.49,000 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 6,115 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 48 ஆயிரத்து 920 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.80.30 ஆகவும், கிலோவிற்கு ரூ.80,300 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment