விஜய் டிவி சீரியலுக்காக சன் டிவி தொடருக்கு குட்பை சொன்ன நடிகை..

by Lifestyle Editor

ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் தொடர்களில் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல். மிகவும் யதார்த்தமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சுருதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தா ரெட்டி.

கதாநாயகிகளில் ஒருவராக இந்த சீரியலில் இவர் நடித்து வரும் நிலையில், இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மீனா, ரோகிணி, ஆகியோரை போல் எதையும் யோசித்து பேசாமல், மனதில் பட்டதை படக்கென பேசி விடுவது இவருடைய இயல்பு. இதுவே இவனுடைய கதாபாத்திரத்தை மேலும் சுவாரஸ்யமாகவும் மாற்றியுள்ளது.

ப்ரீத்தா ரெட்டி, இந்த சீரியலில் மட்டுமின்றி… சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரிலும் அக்ஷயா என்கிற கதாபாத்திரத்தில், கதாநாயகனின் தங்கையாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு ப்ரீத்தா ரெட்டி சில சீரியல்களின் நடித்திருந்தாலும், இந்த சீரியல் தான் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று தந்தது.

மேலும் இனியா மற்றும் சிறகடிக்க ஆசை என இரண்டு சீரியல்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க முடியாமல், இவர் திணறி வருவதால் தற்போது சன் டிவி தொடரில் இருந்து விலகும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இனியா தொடரை விட ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் இவருக்கு லீடு ரோல் என்பதாலும், டிஆர்பி-ல் நல்ல ரேட்டிங்கை பெற்று வருவதாலும், முதலில் வாய்ப்பு கொடுத்த சன் டிவி தொடரை விட்டு விலக பிரீத்தா ரெட்டி முடிவு செய்துள்ளாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment