இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்டில் zee tamil..

by Lifestyle Editor

பல்வேறு தொலைக்காட்சிகள் புத்தம் புது சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பிய வண்ணம் உள்ளன. டிஆர்பி-யில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் சீரியல் ஒன்று டாப் 10 டிஆர்பி ரேஸில் இணைந்திருக்கிறது. அது என்ன சீரியல் என்பதையும் இந்த வார டாப் 10 டிஆர்பி பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.

டாப் 10 டிஆர்பி பட்டியலில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் தான் 10வது இடத்தை பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 5.88 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் 6.35 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 8-ம் இடம் பிடித்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – பாக்கியலட்சுமி மகா சங்கமம், இந்த வாரமும் 7.63 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது.

ஆலியா மானசா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 8.25 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை தக்கவைத்துள்ளது. அதேபோல் விஜய் டிவியின் டிரெண்டிங் சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை, 8.73 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. கேப்ரியல்லா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல் 8.99 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

வழக்கம்போல் டாப் 4 இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதில் நான்காவது இடத்தை 10.39 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் சீரியல் இடம்பெற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 10.43 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து 2ம் இடம் பிடித்துள்ள கயல் சீரியல் 10.83 டிஆர்பி புள்ளிகளையும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே 11.10 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment