66
பப்புவா நியூகினியாவின் எங்கா மாகாணத்தில் நேற்று(18) இரு பழங்குடி சமூகத்தினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவமானது தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக அஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை தாம் வழங்கி வருவதாகவும் அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
எங்கா மாகாணத்தில் கடந்த வரும் பழங்குடியினர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.