அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று பிப்ரவரி 4 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,792-க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.38,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.70க்கும் ஒரு கிலோ ரூ.76,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment