இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது …

by Lifestyle Editor

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 5,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் குறைந்து சவரன் ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 630க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.40 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment