சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்!

by Lifestyle Editor

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து போராட்டக்காரர்கள் ஹைட் பார்க் பிளேஸ் வழியாக அணிவகுத்து பக்கிங்ஹாம் அரண்மனை நோக்கிச் சென்றிருந்தனர்.

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.

Share12

Related Posts

Leave a Comment