கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!

by Column Editor

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் டெஸ்கோ விநியோக மையங்களில் 1,200 தொழிலாளர்கள் வரை பகிஷ்கரிப்பு செய்ய உள்ளதாக யுனைட் யூனியன் தெரிவித்துள்ளது.

களஞ்சிய சாலை ஊழியர்கள் மற்றும் எச்.ஜி.வி. ஓட்டுநர்கள் உட்பட ஆன்ட்ரிம், பெல்ஃபாஸ்ட், டிட்காட் மற்றும் டான்காஸ்டர் ஆகிய இடங்களில் உள்ள தளங்களில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு பகிஷ்கரிப்பு செய்ய உள்ளனர்.

சுப்பர் மார்க்கெட் 4 சதவீதம் ஊதிய உயர்வை வழங்கிய பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, டெஸ்கோ லொரி ஓட்டுநர்களுக்கு 1,000 சேரும் மேலதிக கொடுப்பனவு வழங்குகிறது.

வேலைநிறுத்தங்கள் சில பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று யுனைட் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் எச்சரித்தார்,

இந்த நேரத்தில் பல்பொருள் அங்காடிகள், ஏற்கனவே விநியோகச் சங்கிலி சிக்கல்களுக்கு மத்தியில் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற போராடுகின்றன.

Related Posts

Leave a Comment