வேல்ஸில் கிறிஸ்மஸ்- புத்தாண்டில் ஓமிக்ரோன் கொவிட் மாறுபாடு ஆயிரக்கணக்கான தொற்றுக்களை உருவாக்கலாம்!

by Column Editor

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டில் ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொற்றுகளை வேல்ஸ் காணலாம் என்று சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் கூறியுள்ளார்.

வேல்ஸின் முதல் தொற்று கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இந்த செய்தி வெளியாகியுள்ளது.

வேல்ஸின் மிகப்பெரிய மருத்துவமனை, சனிக்கிழமையன்று ஒரு உயிருக்கு ஆபத்தான பிரச்சினை இல்லாவிட்டால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியது.

இதற்கிடையில், அருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கு கொவிட் கால அனுமதி பத்திரங்களை நீடிப்பதற்கான முடிவு இந்த வார இறுதியில் எடுக்கப்படலாம். வேல்ஸ் அரசாங்கம் அதன் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துகிறது.

வெளிநாட்டு பயணத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த மாறுபாடு மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கு கணிசமான ஆதாரங்கள் எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment