ஒமிக்ரோன் மாறுபாடு சில வாரங்களில் பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் என நிபுணர் எச்சரிக்கை

by Column Editor

ஒமிக்ரோன் மாறுபாடு சில வாரங்களில் பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா மாறுபாடாக மாறும் என தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் பௌல் ஹன்டர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் இந்தமறுபாட்டின் விரைவான அதிகரிப்பை சுட்டிக்காட்டிய அவர், டெல்டா மாறுபாட்டை விட வேகமாக பரவுகிறது என்றும் கூறினார்.

ஒமிக்ரோன் மாறுபாடு பிரித்தானியாவில் எவ்வாறு பரவுகிறது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் நிபுணர் தெரிவித்தார்.

எனவே அடுத்த வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்குள் குறைந்தபட்சம் இந்த ஒமிக்ரோன் மாறுபாடு ஆதிக்கத்தை செலுத்தலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

தற்போது பிரித்தானியாவில் 1,000 க்கும் மேற்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினாலும் உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் 246 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளே இருப்பதாக தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment