பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்கும் இலங்கை!

by Editor News

மனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பாக பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுறையின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த பொறிமுறையும் சுயாதீனமானதாக அர்த்தபூர்வமானதாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்படவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment