பிரித்தானியா செல்வோருக்கான கட்டுப்பாட்டில் மேலும் தளர்வு!

by Column Editor

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பிரித்தானியாவில் விரைவில் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து, ஒரு படிவத்தில் அங்கு வருகை தரும் பயணிகள் தங்களின் தடுப்பூசித் தகுதியை உறுதி செய்தால் போதுமானது என குறிப்பிடப்படுகின்றது.

பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை இரண்டு முறை செலுத்திக் கொண்டவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பயணத்துக்கு முன்னர் வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பிரித்தானியா சென்றதும் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, மெக்சிகோ உள்ளிட்ட 16 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தடுப்பூசிச் சான்றிதழ்களுக்கு பிரித்தானியா அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment