இங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

by Column Editor

இங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய கட்டத்தின் ஒரு பகுதியாக வாரத்தின் தொடக்கத்தில் தேசிய முன்பதிவு சேவை தொடங்கும் போது சுமார் 40,000 இளைஞர்கள் மூன்றாவது டோஸுக்கு தகுதி பெறுவார்கள்.

தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு அனுமதி அளித்ததையடுத்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைப்பின் தடுப்பூசி திட்ட துணைத் தலைவர் நிக்கி கனேனி கூறுகையில், ‘பிரித்தானியாவில் பெரியவர்களில் ஐந்தில் 4 பேர் ஏற்கெனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இப்போது இந்தத் திட்டத்தை 16-17 வயதினருக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்.

இதன்மூலம் இந்த குளிர்காலத்தில் அவர்கள் தங்கள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக்கொள்ளலாம்’ என கூறினார்.

Related Posts

Leave a Comment