பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார் பொரிஸ் ஜோன்சன்!

by Column Editor

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார்.

டவுனிங் ஸ்ட்ரீட்டிலுள்ள பிரதமர் வீட்டில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரான ஒன்றுகூடல்கள் நடத்தப்பட்டமை குறித்து பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டவுனிங் ஸ்ட்ரீட், ஒயிட்ஹால் ஆகிய இடங்கள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய சம்பவங்கள் குறித்தே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இத்தகைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் முதல் முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாட ஒன்றுகூடியதாக ஊழியர்கள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பிரதமரின் அலுவலகத்திலும், அரசாங்கத்தின் வேறு சில கட்டடங்களிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் விதிமீறல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த உத்தியோகப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment