அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்குவதே எனது இலக்கு!

by Lifestyle Editor

”கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே தனது இலக்கு” என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அங்கு சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் பிரசாரத்தை நோக்கி ஓடினோம். தற்போது நாங்கள் கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் வீட்டின் மேற்கூரை மீது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் அமைப்பது குறித்து மிகப்பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு சோலார் தகடுகள் அமைப்பதற்கு மத்திய அரசு உதவி புரியும்.

மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும் வசதியானதாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்காக உள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment