குறைந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 46,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை 5,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மட்டும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50க்கும், ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment