பைனலில் அர்ச்சனாவுக்கு 19 கோடி ஓட்டு கிடைத்ததா? இது மோசடி – புயலை கிளப்பிய பிரபலம்

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சுமார் 105 நாட்கள் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, மாயா, விஷ்ணு விஜய், மணிச்சந்திரா, தினேஷ் ஆகிய ஐந்து பேர் தான் பைனலுக்கு முன்னேறி இருந்தனர். இவர்களில் மாயாவுக்கு மூன்றாவது இடமும், மணிச்சந்திராவுக்கு இரண்டாம் இடமும், அர்ச்சனாவுக்கு முதலிடமும் கிடைத்தது. தினேஷ் மற்றும் விஷ்ணு முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்தனர்.

இதில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் சொகுசு கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் மோசடி வேலைகள் நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அர்ச்ச்னா பிஆர் வைத்தும், காசு செல்வளித்தும் தான் ஓட்டுக்களை வாங்கியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பிஆர் சர்ச்சை குறித்து பேசிய அர்ச்சனா. தனக்கு பைனலில் 19 கோடி ஓட்டுக்கள் கிடைத்ததாகவும், ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட 19 கோடி செலவு செய்ய வேண்டும். அவ்வளவு பெரிய ஆள் நான் இல்லை. 50 லட்சத்துக்காக கோடிக்கணக்கில் யாராவது செலவு செய்வார்களா எனக்கூறி தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அர்ச்சனா தனக்கு 19 வாக்குகள் கிடைத்ததாக சொன்னதை வைத்தே தற்போது புது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகரும் பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதன்படி அவரிடம் ரசிகர் ஒருவர், விஜய் டிவியின் பார்வையாளர்கள் எண்ணிக்கையே 3 கோடி தான். அப்படி இருக்கையில் அர்ச்சனாவுக்கு மட்டும் எப்படி 19 கோடி வாக்குகள் கிடைத்தன என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ரவீந்தர், 19 கோடி என்பது சாத்தியமே இல்லை. ஓட்டு சதவீதத்தை எப்போதும் விஜய் டிவி தெரிவிக்காது. என்ன தான் இருந்தாலும் அது முடிந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment