தீபாவளி திருநாளில் கோலாகலமாக மாறிய பிக்பாஸ்

by Column Editor

தீபாவளியையொட்டி பிக்பாஸ் வீடு ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக மாறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக போர்க்களமாக மாறி இருந்தது பிக்பாஸ் வீடு. இந்த வீட்டை சுவாரஸ்யமாக்க புதுப்புது டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதை போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். அப்படி விளையாடும்போது போட்டியாளர்களிடையே பல சண்டைகள் ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் வீடு சண்டை களமாக மாறியது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீடு கோலாகலமாக மாறியுள்ளது. அதன்படி பிக் பாஸ் தமிழ் நெஞ்சங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ தொடங்குகிறது. தீபாவளியையொட்டி பிக்பாஸ் வீட்டில் கோலாகல கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்களின் ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியுள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு இடையே விஜய் டிவி தொகுப்பாளர் ம.க.பா.ஆனந்த் சிறப்பு விருந்தினராக வருகிறார். அப்போது ம.க.பா.ஆனந்த் பார்க்கும் பிரியங்கா, கதறி அழுதுக்கொண்டு ஒடுகிறார். இது ரசிகர்களின் நெஞ்சை உருக்குவது போன்று உள்ளது.

இதையடுத்து போட்டியாளர்களிடம் பேசும் ம.க.பா.ஆனந்த், வெளியே விட தீபாவளி கொண்டாட்டம் பிக்பாஸ் வீட்டில் கிராண்ட்டாக உள்ளது என்கிறார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சிறந்தவர்கள் ஆண்களா பெண்களா என்ற பட்டிமன்றம் நடக்கிறது. கடைசியாக இன்று 7 மணிக்கு அன்லிமிடெட் அட்டகாசத்தை ஆரம்பிப்போம் என்பதுடன் ப்ரோமோ நிறைவுபெறுகிறது.

Related Posts

Leave a Comment