இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் இவர்தான்…

by Editor News

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

41-வது நாளை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் சுவாரஸ்யயம் குறைந்து இருந்தது. அதன்பிறகு புதிய டாஸ்க்குள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வந்தனர். இதனால் போட்டியாளர்கள் ஆர்வமாக விளையாடி வந்தனர். ஆனால் கடைசியாக கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் போட்டியாளர்களிடையே சண்டை ஏற்பட்டு அடித்துக்கொண்டனர்.

இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது. அதேநேரம் இந்த வார நாமினேஷனில் பாவனி, மதுமிதா, இமான் அண்ணாச்சி, ராஜூ ஜெயமோகன் உள்ளிட்டோர் இருந்தனர். அதில் சக‌ போட்டியாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் ராஜூ காப்பாற்றப்படுவதாக நேற்று கமல் அறிவித்தார்.

இதையடுத்து பார்வையாளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாவனி, மதுமிதா, இமான் அண்ணாச்சி ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கின்றனர். அதனால் இவர்களில் ஒருவர்தான் வெளியேற்றப்பட உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்ற மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்து 40 நாளே ஆன நிலையில் மதுமிதா வெளியேறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment