சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்தது..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்படமொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,281 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,036 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 114 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.255.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 497.00 புள்ளிகள் உயர்ந்து 56,319.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 156.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,770.85 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment