TRP-ல் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி மடமடவென முன்னேறிய விஜய் டிவி தொடர்கள் – டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ

by Lifestyle Editor

52-வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதலிடம் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 11.44 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது. கடந்த வாரமும் இந்த சீரியல் முதலிடத்தில் தான் இருந்தது. இதற்கு அடுத்த இடம் சன் டிவியின் கயல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியல் 10.52 டிஆர்பி புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் தட்டி தூக்கி இருக்கின்றன. அதன்படி வானத்தைப்போல சீரியல் 3-ம் இடத்திலும், எதிர்நீச்சல் சீரியல் நான்காவது இடத்திலும், சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் வானத்தைப்போல சீரியலுக்கு 9.80 டிஆர்பி புள்ளிகளும், எதிர்நீச்சலுக்கு 8.75 புள்ளிகளும், சுந்தரி சீரியலுக்கு 8.65 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து ஆறாவது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 8.27 புள்ளிகள் கிடைத்துள்ளது. கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த இனியா சீரியல் இந்த வாரம் 7.94 புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 8-வது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 7.57 புள்ளிகளுடன் 8ம் இடம் பிடித்துள்ளது.

விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் இந்த வாரம் 9-ம் இடம்பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 10-வது இடத்தில் இருந்த ஆஹா கல்யாணம் சீரியல் 7.10 டிஆர்பி புள்ளிகள் உடன் 9-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த வாரம் 7-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் பலத்த அடி வாங்கி 10 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு 6.33 டிஆர்பி புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளதாம்.

Related Posts

Leave a Comment