பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

by Lifestyle Editor

வடக்கு சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்குமொன்று ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் கடற்பரப்பை அண்டிவாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு சுமாத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளதுடன், சுமாத்திரா தீவுகளை அண்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எவ்வித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.

இதேவேளை, நேற்று இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இரவு 10.01 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. அத்துடன், கடந்த 26ஆம் திகதி சத்தீஸ்கர் மற்றும் 27ஆம் திகதி அசாம் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. இருந்தாலும் வேறு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment