நீதிமன்றம் வந்த பிக்பாஸ் 7 புகழ் தினேஷ் விவாகரத்து வழக்கு- அவரது மனைவி ரச்சிதா போட்ட பதிவு!

by Lifestyle Editor

சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் தான் தினேஷ் மற்றும் ரச்சிதா. இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் முதன்முதலில் ஜோடியாக நடித்தார்கள்.

அந்த தொடர் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணமும் செய்தார்கள்.

ஒன்றாக வாழ்ந்துவந்த இவர்கள் அவரவர் வேலைகளிலும் பணியாற்றி வந்தார்கள், ஆனால் ரச்சிதா கடந்த பிக்பாஸ் 6 சீசனில் கலந்துகொண்ட போதுதான் இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

தினேஷ் ரச்சிதாவுடன் இணைந்து வாழ நினைத்தாலும் ரச்சிதா அதற்கு தயாராக இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

தினேஷ் பிக்பாஸ் 7வது சீசனில் ரச்சிதா குறித்து பேசி வர அவரோ விவாகரத்து பெறுவதில் மும்முரமாக உள்ளார். தற்போது தினேஷ்-ரச்சிதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் வந்துள்ளதாம்.

இந்த நேரத்தில் நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாவில், இறக்கும் நேரம் வரும் போது இறந்து விட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருவர்.

என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள் என்று குறிப்பிட்டு நிம்மதியான வாழ்கை, வாழு, வாழ விடு போன்ற டாக்குகளை பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment