தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம் விலை!

by Column Editor

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்து, ₹46,000-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ₹5750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 45,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,720க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று முன் தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,600க்கு விற்பனைனது. இந்த நிலையில், நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment