கொத்தமல்லி துவையல்

by Column Editor

தேவையான பொருட்கள்:

* கொத்தமல்லி – 1 கப்
* உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 3-ஜ
* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
* புளி – 1 இன்ச் துண்டு
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு, வரமிளகாய், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்தால், சுவையான கொத்தமல்லி துவையல் தயார்.

Related Posts

Leave a Comment