ராகி சப்பாத்தி…!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
தண்ணீர் – 3/4 கப்
உப்பு, எண்ணெய் – தேவைசெய்முறை

செய்முறை:
ராகி சப்பாத்தி செய்ய முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் இப்போது அதில் எடுத்து வைத்த ராகி மாவை சேர்த்து கைவிடாமல் கிண்டி கொண்டே இருங்கள். குறிப்பாக கட்டி வராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து அதை கீழே இருக்க வைத்துவிட்டு ஆற விடுங்கள். இப்போது ராகி மாவு சூடு ஆறியதும், அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு, பிசைந்து வைத்துள்ள ராகி மாவில் இருந்து சிறிதளவு மாவு எடுத்து, அதை உருட்டி ராகி மாவில் புரட்டிப்போட்டு பிறகு சப்பாத்தி கட்டையால் உருட்டி எடுத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் சப்பாத்தி கல்லை வைத்து கல் சூடானதும் அதில் எண்ணெய் தடவி, உருட்டி வைத்த ராகி சப்பாத்தி மாவை அதில் போட்டு இருபுறமும் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது ஆரோக்கியமான மற்றும் ருசியான ராகி சப்பாத்தி ரெடி!! இந்த ராகி சப்பாத்தியுடன் நீங்கள் தேங்காய் சட்னி அல்லது தக்காளி தொக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment