நியாயம் கேட்டு சென்ற கோபியை தர்ம அடிக் கொடுத்த ராதிகா-பாக்கியலட்சுமி

by Lifestyle Editor

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் பாக்கியா நடித்து வருகிறார். கோபி, ராதிகா, இனியா என குடும்பக்கதையை சீரியலாக எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாக்கியாவுடன் அமர்ந்து பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த கோபி பொறுத்து கொள்ள முடியாமல் தேவையற்ற வார்த்தை பயன்படுத்தி பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார்.

வரம்பு மீறும் பேசும் கோபியை எப்படி வாயடைப்பது என தெரியாமல் கோபியை வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறு பாக்கியா கத்துகிறார்.

இந்த நிலையில் ஈஸ்வரி வந்ததும் நடக்காத விடயங்களை கோபியை கூறுகிறார்கள். வீட்டிலுள்ள யாரும் இதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் கோபி என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறார்.

இதனை பார்த்த ராதிகா,“ என்ன கோபி ” என கேட்ட போது நடந்ததை கூறுகிறார். இவற்றை பொறுமையாக கேட்ட ராதிகா, “ பாக்கியாவுடன் யாரு பேசினால் உங்களுக்கு என்ன?” என கேட்டுள்ளார்.

ஷாக்குடன் கோபி ராதிகாவை பார்க்கும் பொழுது அடுத்தடுத்து பாக்கியாவிற்கு சார்பாகவே ராதிகா பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த காட்சியை பார்த்த இணையவாசிகளும் “ ராதிகா ஏன் இப்படி மாறி விட்டார்…” என குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment