டபுள் எவிக்சன் கமல் அதிரடி...

by Lifestyle Editor

பிரபல தொலைக்காட்சியில் நாம் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தன்னுடைய 50 நாட்களை நிறைவு செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷனில் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெளியேறினார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் நாமினேஷனில் 8 போட்டியாளர்கள் சிக்கியுள்ளனர்.

அதன்படி விசித்ரா, தினேஷ், பூர்ணிமா, மணி, கூல் சுரேஷ், அனன்யா, விக்ரம், ஜோவிகா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் கண்டிப்பாக விக்ரம் வெளியேற வேண்டும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

ஆனால் இவரை தாண்டி குறைவான வாக்குகளால் ஜோவிகா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் வெளியான வோட்டிங்கில் ஜோவிகா 22,866 வாக்குகளை பெற்று வெளியேற போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment