வனிதாவுக்கு எதிராக ஒன்றுக்கூடிய ஹவுஸ்மேட்டுகள்… அதிர்ச்சியில் கமல் !

by Lifestyle Editor

வனிதாவுக்கு எதிராக ஹவுஸ்மேட்டுகள் அனைவரும் ஒன்றுக்கூடியதால் கமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் கமல் நேரடியாக ஹவுஸ்மேட்டுகளிடம் பேசவிருக்கிறார். அதற்கான முதல் ப்ரோமோவில் பேசும் கமல், இந்த வாரம் காதலில் தொடங்கி கல்லூரியில் வாழ்ந்து கலக்கத்தில் முடிவடைந்திருக்கிறது. பனி மலையாய் இருந்தவர்கள் எரிமலையாய் எழுந்து எழுந்து இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

இதையடுத்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் காத்திருப்பதாக கமல் அறிவித்திருக்கிறார். உங்கள் ஓட்டுகளால் யார் வாழ்க்கையை மாற்றப்போகிறீர்கள். வெளியேறும் போகும் அந்த இரு போட்டியாளர் யார் என்று கேள்வி கேட்கிறார். இதுகுறித்து இன்று இரவு தெரிந்துவிடும் என்பதால் அது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வனிதாவின் கேப்டன்ஸி குறித்து பேசும் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இந்த வார கேப்டனாக இருந்த வனிதா வீட்டில் எப்படி செயல்பட்டார் என மதிப்பெண் கொடுக்கலாம் என்று கமல் கேட்கிறார். அதற்கு சினேகன், அபிராமி, பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஷாரிக், தாமரைச்செல்வி, நிரூப், ஸ்ருதி என அடுத்தடுத்து வனிதாவின் கேப்டன்சி சரியில்லை என்று கூறுகின்றனர். இதனால் வனிதா எரிச்சலடையும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment