புதிய படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் கல்லூரி, கலெக்டர் ஆகும் கனவு, காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் காற்றுக்கென்ன வேலி.

ஜனவரி 2018ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 809 எபிசோடுகளுடன் கடந்த செப்டம்பர் 2023ல் தொடர் முடிவடைந்தது.

இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் பிரியங்கா.

கன்னட நடிகையான இவர் தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து இங்கேயும் பிரபலம் ஆகிவிட்டார்.

நிறைய போட்டோ ஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஆக்டீவாக இருந்துவந்த பிரியங்காவிற்கு இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது Bad Manners என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளாராம்.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment