குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சிகள்

by Lifestyle Editor

குழந்தைகளுக்காக எளிய முறையில் உடற்பயிற்சியை ஆரம்பம் முதல் கற்றுக் கொடுத்தால் தான் அவர்கள் உடல் பருமனை தவிர்க்கலாம் என்பதும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களையும் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பது கடினமாக இருந்தால் அவர்கள் உடற்பயிற்சி செய்ய மறுப்பார்கள், எனவே எளிய உடற்பயிற்சிகளை அதுவும் பொழுதுபோக்கான விளையாட்டு போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வைக்க வேண்டும்.

குறிப்பாக நடனம் ஆடுவது என்பது குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சி. இது உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். அதேபோல் மைதானத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று சில எளிய விளையாட்டுகளை சொல்லி தரலாம். ஸ்கிப்பிங் உள்ளிட்ட உடற்பயிற்சி குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

உடற்பயிற்சி மட்டுமின்றி சிறிய வயதிலேயே யோகா உள்ளிட்ட பயிற்சியையும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

Related Posts

Leave a Comment