இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம்..

by Lifestyle Editor

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக இறங்கிய நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து மீண்டும் சவரன் 54 ஆயிரத்தை தாண்டி உள்ளத்தை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,755 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 அதிகரித்து ரூபாய் 54,040 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,225 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Related Posts

Leave a Comment