உடற்பயிற்சியே செய்யாமல் உங்க எடையை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா..?

by Lifestyle Editor

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரணப்பட்ட காரியம் அல்ல. அதிலும் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நாம் யோசிக்கும் பொழுது நம் மனதில் வரக்கூடிய முதல் விஷயம் ஜிம் மற்றும் டயட். ஆனால் அனைவருமே ஜிம்முக்கு செல்வதில்லை அல்லது உடற்பயிற்சியை அவர்களது அன்றாட வாழ்க்கையில் செய்வதில்லை.

இப்படி இருக்க இவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது என்று அர்த்தம் ஆகிவிடுமா என்ன? உடல் எடை குறைப்பு என்பது முழுக்க முழுக்க நீங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சியை மட்டுமே சார்ந்து இருக்காது. அது தவிர நீங்கள் எடுக்கக்கூடிய உணவு மற்றும் பின்பற்றும் வாழ்க்கை முறையும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சில யுக்திகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

குறைந்த கலோரி கொண்ட டயட்டை உருவாக்கவும் : நீங்கள் செலவு செய்வதை காட்டிலும் குறைந்த அளவிலான கலோரிகளை எடுப்பதே உடல் எடையை குறைப்பதற்கான அடிப்படை கொள்கையாக அமைகிறது. அதாவது நீங்கள் எரிக்கும் கலோரிகளை காட்டிலும் குறைவான கலோரிகளை சாப்பிட வேண்டும். உங்களுடைய தினசரி கலோரி தேவைகளை கணக்கிட்டு அதற்கேற்றவாறு குறைவான கலோரி கொண்ட ஒரு டயட் பிளானை உருவாக்கி அதனை பின்பற்றுங்கள். இதற்கு நீங்கள் டயட்டீஷியன் ஒருவரின் ஆலோசனையை கேட்கலாம்.

ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்தவும் :

ஆரோக்கியமான உணவு செய்ய முடியாத காரியம் எதுவும் இல்லை. எனவே ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துவதற்கு அறிவுறுத்தப்படுகிறீர்கள். காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரோட்டீன்கள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய முழு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடவும். அதுமட்டுமல்லாமல் குப்பை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் அதிக கலோரி நிறைந்த பானங்களை தவிர்க்கவும்.

அளவு கட்டுப்பாடு :

ருசியான உணவு சாப்பிடும் பொழுது நம்மை அறியாமலேயே அளவுக்கு மீறி சாப்பிட்டு விடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறிய அளவிலான தட்டுகள், கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் அளவு கட்டுப்பாட்டை பின்பற்றலாம்.

வழக்கமான முறையில் உணவு சாப்பிடவும் :

உணவை தவிர்ப்பதன் மூலமாக நீங்கள் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க இயலாது. ஆகவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் மூன்று வேலை கட்டாயமாக சாப்பிட வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது அதிகப்படியாக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

போதுமான அளவு தண்ணீர் :

நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நாம் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியம். எனவே நாள் முழுவதும் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். சில நேரங்களில் தாகத்தை நீங்கள் பசியென எண்ணி தேவை இல்லாமல் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதுண்டு. இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மன அழுத்தத்தை குறைக்கவும் :

இன்றைய கடுமையான வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ஒரு சிலர் அதிகப்படியாக சாப்பிடுவார்கள். ஆகவே மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றை நீங்கள் பின்பற்றலாம்.

போதுமான அளவு தூக்கம் :

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு தூக்கம் மிகவும் அவசியமானது. எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் நிம்மதியாக உறங்குங்கள். உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காத போது பசி ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, நேரம் கெட்ட நேரத்தில் நீங்கள் உணவு சாப்பிட நேரலாம்.

இந்த யுக்திகளை உடற்பயிற்சி இல்லாமலேயே உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவும். எனினும் உங்கள் அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்ப்பதன் மூலமாக இன்னும் பல்வேறு ஆரோக்கிய நலன்களை நீங்கள் பெறலாம்.

Related Posts

Leave a Comment