பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ்-க்கு இரண்டாவதாக பெண் குழந்தை!நெகிழ்ச்சி பதிவு!

by Lifestyle Editor

பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ்-க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் காலடியெடுத்து வைத்தவர் காயத்ரி யுவராஜ்.

தொடர்ந்து தென்றல் தொடர் மூலம் சீரியலுக்குள் வந்தார், நம்ம வீட்டு பொண்ணு என்ற முகமும், அசாத்தியமான நடிப்பும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து அழகி, மெல்ல திறந்தது கதவு, சரவணன் மீனாட்சி என அடுத்தடுத்து பல தொடர்களில் நடித்தார்.

சில சீரியல்களின் இவரது வில்லத்தனமும் பேசப்பட்டது, கடைசியாக மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துவிட்டு, சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது தான் எதிர்பார்த்தபடியே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தன்னுடைய பிறந்தநாளிலேயே பிறந்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

இவருக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment