5 வருடமாக வெற்றிகரமாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது …

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே ஒரு சில சீரியல்கள் நம் கண்முன் வந்து நிற்கும், அப்படி நமக்கு முதலில் நியாபகம் வரும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இந்த தொடர் அண்ணன்-தம்பிகள் 3 பேரையும் பாசமாக பார்த்துக் கொள்ளும் அண்ணனின் மனைவி என்ற புரொமோவுடன் தொடங்கியது.

ஆரம்பத்தில் வரவேற்பு பெற நாட்கள் எடுத்தாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சீரியலை கொண்டாடினார்கள்.

இடையில் அவ்வப்போது சுமாரான கதைக்களம் வரும், பின் மீண்டும் கதை மாற தொடருக்கும் TRP அதிகமாகும்.

இப்படியே போய் தொடர் 5 வருடத்தை எட்டிவிட்டது, ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது, இன்று 28 அக்டோபர் 2023 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாகும் நாள்.

இன்று குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு தொடரை முடித்துள்ளனர். சீரியல் நடிகர்கள் அனைவருக்கும் இருக்க சுபம் என தொடரை முடித்துவிட்டனர் …

Related Posts

Leave a Comment