இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் …

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எவிக்ஷனில் சிக்கிய முக்கிய பிரபலம் :

இப்படியொரு நிலையில் இந்த வாரம் நாமினேஷனில், பிரதீப், நிக்ஷன், ஜோவிகா, மணி, விஷ்ணு, அக்ஷயா, மாயா, யுகேந்திரன்,விக்ரம், கூல் சுரேஷ், வினுஷா ஆகிய போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட ரேட்டிங் டாஸ்க்கால் பிரதீப்பின் ரேட்டிங் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் உயர்ந்துள்ளது. அத்துடன் கடந்த வாரம், கடுமையாக நடந்து கொண்டதால் மக்களின் எதிர்ப்பை பெற்று விஜய் வர்மா வெளியேறினார்.

ஆனால் போன வாரம் விஜய் வர்மா இல்லா விட்டால் பாரதி கண்ணம்மா வினுஷா தான் வெளியேறியிருப்பார்.

3 வாரங்களாகியும் எந்த வேலையும் செய்யாமல் கேமராவிற்கு முன் வராமல் அமைதியாக இருக்கும் வினுஷா இந்த வாரம் பெட்டி படுக்கையுடன் வெளியேற போகிறார். இவரை தொடர்ந்து கூல் சுரேஷ் அல்லது அக்ஷயா வெளியேறுவார் என ரசிகர்கள் தங்களின் கணிப்பை பகிர்ந்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment