சிங்கப்பூர் வாசிகளே சூப்பர் ஆஃபர்! மின்சாரத்தை சிக்கனமா பயன்படுத்துங்க

by Lankan Editor

சிங்கப்பூரில், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இனி ஊக்கத்தொகை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறை படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பங்கள் மின்சாரத்தை தேவைக்கு சிக்கனமாகப் பயன்படுத்த பல்வேறு வழிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது. மேலும், குறிப்பாக மின்தேவை உச்ச நேரங்களின் போது மின்சாரப் பயன்பாட்டை குறைக்கவும், வீடுகளில் தேவைக்கேற்ப மின்சார பயன்பாட்டை கண்காணிக்கவும் புதிய சாதனம் ஒன்று பொருத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நடைமுறை அடுத்த ஆண்டின் 2வது பாதியில் நடைமுறைக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் பொருத்தப்படும் இந்த புதிய சாதனம், மக்கள் பயன்படுத்தும் மின்சாரப் பயன்பாட்டை கண்காணித்து அதை குறைத்துக்கொள்ள தேவையான வழிமுறைகளை பரிந்துரைக்கும்.

சிங்கப்பூரில் கடந்த மாத நிலவரப்படி குடியிருப்பு வீடுகளிலும் மற்ற இடங்களிலும் சுமார் 8,34,000க்கும் அதிகமான மின்சார கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் SP குழுமம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மக்களுக்கு செல்போன் மூலம், தேவைக்கு ஏற்ப மின்சார பயன்பாட்டைக் குறைக்கும்படி சிங்கப்பூர் SP குழுமத்தின் ஆப் -செயலி மூலம் உடனுக்குடன் தவகல் குறிப்புகள் அனுப்பப்டுகின்றன.

அவ்வாறு மின்தேவையை கட்டுப்படுத்தும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment