அண்ணாமலை சீரியல் புகழ் நடிகை பூஜாவை நியாபகம் இருக்கா?

by Lankan Editor

நடிகை பூஜா

சன் தொலைக்காட்சியில் 2002ம் ஆண்டு ஒளிபரப்பான அண்ணாமலை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா. இவருக்கு முதல் சீரியலே பெரிய ரீச் கொடுக்க குட்டி பூஜா என்று அழைக்கப்பட்டார்.

காரணம் படப்பிடிப்பில் ரொம்பவும் சுட்டியாக இருப்பாராம். அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது பூஜாவிற்கு நடனமே தெரியாதாம், அதன்பிறகே கற்றுக்கொண்டாராம்.

அப்படியும் ஜோடி நம்பர் 1 ஒரு சீசனில் வெற்றியாளராகவும் ஜெயித்துள்ளார்.

குடும்பம்

பூஜாவிற்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்களாம். அவரது மூத்த மகளுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளதாம், அவர் படிப்பு முடித்து நடிக்க விரும்பினால் கண்டிப்பாக அதற்காக தான் உதவுவேன் என்றும் பூஜா கூறியிருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் அவர் வலம் வரலில்லை என்றாலும் கனடாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இதோ நடிகை பூஜாவின் அழகிய குடும்ப புகைப்படம்,

Related Posts

Leave a Comment