உடல் மெலிந்து போன அஜித்.. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

by Lankan Editor

விடாமுயற்சி

பிரமாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

மெலிந்து போன அஜித்

அந்த வகையில் தற்போது அஜித்துடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அஜித் உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்து போய்விட்டாரே என கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

 

Related Posts

Leave a Comment