குடியரசு தினத்தில் ‘பீஸ்ட்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ?… முக்கிய நடிகர் தகவல் !

by Column Editor

விஜய்யின் ‘பீஸ்ட்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் நடிப்பில் அதிரடியாக உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஜார்ஜியா, சென்னை,. டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 100 நாட்களுக்கு மேல் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியான நிலையில் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment