28,000 ரூபாயில் அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோவில் என எல்லாம் பார்க்க சூப்பர் IRCTC பேக்கேஜ் …

by Lifestyle Editor

இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பக்தி சுற்றுலா பேக்கேஜ் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கும் செல்ல விரும்பும் பக்தர்களுக்குIRCTC சுற்றுலா ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிவித்துள்ளது. கங்கா ராமாயண யாத்திரை என்ற பெயரில் ஹைதராபாத் நகரத்தில் இருந்து டூர் பேக்கேஜ் இயங்குகிறது.

இந்த பக்தி சுற்றுலாவிற்கு , ஹைதராபாதில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விமானத்தில் அழைத்துச் செல்லப் படுவார்கள். விமானம், பேருந்து மூலம் செல்லும் இந்த பயணம், வாரணாசி,அயோத்தி, நைமிசாரண்யா, பிரயாக்ராஜ் மற்றும் சாரநாத் கோவில்களை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை வழங்கும். இது 5 இரவுகள், 6 நாட்கள் கொண்ட சுற்றுலா மே 25ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

விமானம் புறப்படும் நேரம் சேரும் நேரம்
ஹைதராபாத்-வாரணாசி (6E 915) காலை 09:35 மணி காலை 11:25 மணி
லக்னோ-ஹைதராபாத் (G8 76) மாலை 6 மணி இரவு 8:00 மணி

நாள் 1: ஐஆர்சிடிசி கங்கா ராமாயண யாத்திரையின் முதல் நாள் காலை 9.15 AM க்கு ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 2 மணி நேர விமான பயணம் முடித்து 11.15 AM மணிக்கு வாரணாசியை சென்றடையும். ஹோட்டலில் செக்-இன் செய்த பிறகு, கங்கா காட், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லலாம். வாரணாசியில் இரவு தங்க வைக்கப்படுவர்.

நாள் 2: இரண்டாம் நாள் காலையில், சாரநாத், மதியம் வாரணாசி என்று சுற்றி பார்க்கலாம். மாலையில் நேரம் இருக்கும் அப்போது கங்கையின் படித்துறைக்குச் செல்லலாம் .

நாள் 3: பிரயாக்ராஜில் உள்ள அலோபி தேவி கோயில் மற்றும் திரிவேணி சங்கம் ஆகியவற்றைக் காணலாம். மாலையில் அயோத்திக்குச் சென்று அங்கே தங்க வைக்கப்படுவர்.

நாள் 4: அயோத்தி கோவிலை பார்த்துவிட்டு. மதியம் லக்னோவுக்குக் கிளம்பலாம்.

நாள் 5: லக்னோவில், உள்ள நைமிசாரண்யாவில் முழு நாள் சுற்றுப்பயணம் இருக்கும். மாலையில் லக்னோ திரும்பி இரவு தங்குங்கள்.

நாள் 6: காலை தொடங்கி பாரா இமாம்பரா, அம்பேத்கர் நினைவுப் பூங்காவிற்குச் சென்று சுற்றிபார்க்கலாம். அதன் பிறகு லக்னோவில் இருந்து ஹைதராபாத் நகரத்திற்கு பயணம் தொடங்கும். லக்னோவில் மாலை 6 மணிக்கு விமானம் என்றால் இரவு 8 மணிஹைதராபாத் சுற்றுலா வந்தவுடன் முடிகிறது.

பேக்கேஜின் விலை:

ஐஆர்சிடிசி கங்கா ராமாயண் யாத்ரா டூர் பேக்கேஜின் விலையைப் பார்த்தால், மூன்று பேர் தங்கும் வசதி கொண்ட பேக்கேஜுக்கு ரூ.28,200 கட்டணமும், இரண்டு பேர் தங்கும் பேக்கேஜுக்கு ரூ.29,900 மற்றும் ஒற்றை ஆக்கிரமிப்பிற்கு ரூ.36,850 செலுத்த வேண்டும். டூர் பேக்கேஜில் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல், காலை உணவு, இரவு உணவு, ஏசி பேருந்தில் சுற்றிப் பார்ப்பது, பயணக் காப்பீடு அனைத்தும் அடங்கும்.

முன்பதிவு விவரங்கள்

ஆர்வமுள்ள பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மே 25 அன்று ஒரு குழு கிளம்ப இருக்கிறது. உங்களது பெயரையும் சேர்த்து விடுங்கள். ஜாலியா ஒரு பக்தி சுற்றுலா போய் வரலாம் .

Related Posts

Leave a Comment