கோபால்பூர் – வியப்பூட்டும் அழகின் இருப்பிடம்!

by Lifestyle Editor

கடற்கரை நகரமான கோபால்பூர் ஒடிசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வங்கக் கடலுக்கு அருகில் உள்ள கோபால்பூர் ஒடிசாவின் முக்கியமான மூன்று சுற்றுலா தளங்களுள் ஒன்றாகும். பெர்ஹாம்பூரில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள்.

சிறிய மீனவ கிராமமாக இருந்த இந்த நகருக்கு ஆங்கிலேயர்களின் வருகையின் போது விமோசனம் கிடைத்தது. கிழக்கிந்திய கம்பனி இந்த நகரை தங்கள் கப்பல் தளமாக பயன்படுத்தினார்கள். ஆந்திர பிரதேசத்திற்கு அருகில் உள்ளதாலும் மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு அருகில் உள்ளதாலும் இந்நகரம் வியாபார மையமாக வளர்ந்தது.

கோபால்பூர் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்

மா தாரா தரிணி மலைக்கோவில், பால குமாரி கோவில், சித்திபினாயகா பிதா போன்ற கோவில்களும், சோனேபூர் கடற்கரை, ஆர்யபள்ளி கடற்கரை, போபால்பூர் கடற்கரை போன்ற கடற்கரைகளும் இங்கு உள்ளது.

பாரம்பரிய வாழ்க்கைமுறையால் காண்போரை ஈர்க்கும் பஞ்சமா, பள்ளிபதார் போன்ற அருகாமை கிராமங்களும் உள்ளன. சடபடா டால்பின் சரணாலயம் மற்றும் பங்கேஷ்வரி ஆகிய இடங்களும் முக்கியமானவை.

கோபால்பூர் சந்தை

வாங்குவதில் விருப்பமுள்ளவர்களுக்கு புகழிடமாக கோபால்பூர் திகழ்கிறது. கைவினைப் பொருட்கள், கடல் ஓடுகள், பட்டு சேலைகள் ஆகியவை உள்ளூர் மக்களால் விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது ஓடுகளால் ஆன கைவளையங்கள், அணிகலன்களும் கிடைக்கின்றன.

கோபால்பூர் செல்ல வழிகள்

பிஜு பட்நாயக் விமானநிலையத்தை கோபால்பூர் செல்ல நினைக்கும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாது பெஹ்ராம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோபால்பூருக்குரயில் சேவைகள் உண்டு. தனியார் கார்கள் மற்றும் பேருந்துகள் மூலமும் பயணிக்கலாம்.

பயணிக்க சிறந்த பருவம்

வருடம் முழுதும் மிதமான வானிலை நிலவும் கோபால்பூருக்கு செல்ல உகந்த பருவமாக அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் கருதப்படுகிறது.

Related Posts

Leave a Comment