தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது …

by Lifestyle Editor

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது,. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment