ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாளில் 2% தேர்ச்சி …

by Lifestyle Editor

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் முடிவு நேற்று வெளியானது. இந்த தேர்வை 4,01,986 பேர் எழுத பதிவு செய்த நிலையில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

1.5 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment