பத்து தல திரைப்படம் – சிறப்பு காட்சிக்கு அனுமதி ரத்து ….

by Lifestyle Editor
0 comment

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது .

நடிகர் சிம்பு நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த இரு படங்களின் வெற்றிக்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நடிகர் சிம்புவுக்கு ஜோடி இல்லை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பத்து தல படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்துக்காக அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் வேறலெவலில் ஹிட் அடித்துள்ளன. கன்னடத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஃப்டி என்கிற படத்தை தழுவி தான் பத்து தல படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

Related Posts

Leave a Comment