நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை ..

by Lifestyle Editor

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இருநாடுகளும் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் பல்வேறு உதவிகளை செய்தனர். இதுரையில் அந்த இரு நாடுகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிமீ சுற்றளவு கொண்ட மக்கள் வசிக்காத இந்த தீவுக்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Related Posts

Leave a Comment