தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கியது சீனா

by Lifestyle Editor

கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தியிருந்த பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கையை சீனா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சர்வதேச பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்த சீனா இன்று முதல் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

அதன்படி இன்று சிங்கப்பூர் மற்றும் கனடாவிலிருந்து விமானங்கள் சீனாவிற்கு வந்ததாகவும் அதில் பயணித்தவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய தனிமைப்படுத்தல்கள், கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் மற்றும் அடிக்கடி சோதனை ஆகியவற்றின் காரணமாக கடந்த மாதம் பல எதிர்ப்பு போராட்டங்களை சீனா சந்தித்தது.

இதனை அடுத்து கட்டம் காட்டமாக சில தளர்வுகளை அறிவித்த சீனா, தற்போது சர்வதேச பயணிகளையும் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment