இராணுவ அகடமியில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல் : இறுதி அஞ்சலியோடு உடல்களை அடக்கம் செய்யும் மக்கள்

by Lankan Editor

சிரியாவின் மேற்கு நகரமான ஹோம்ஸில் உள்ள இராணுவ அகடமியில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடல்களை ஆதங்கம் செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.

நேற்றையதினம் பட்டமளிப்பு விழாவிற்காக புதிய அதிகாரிகளுடன் அவர்களது பெற்றோர்களும் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 31 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 89 பேர் கொல்லப்பட்டதாக சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளதாக சிரிய மோதலை கண்காணிக்கும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிரியாவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எவரும் உரிமைகோராத நிலையில் பயங்கரவாத குழுக்கள் இதன் பின்ணனியில் இருப்பதாகவும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் சிரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை சிரியாவின் தேசிய கொடிகளை கொண்டு மூடி ஹோம்ஸ் இராணுவ மருத்துவமனைக்கு வெளியே மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Related Posts

Leave a Comment