12 ஆண்டுகளுக்குப் பின் பிரேசில் அதிபரானார் லுலா டா..

by Lifestyle Editor

12 ஆண்டுகளுக்கு பின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட லுலாடா, பிரேசில் நாட்டின் 39வது அதிபராக பதவியேற்றார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயிர் போல்சனரோ, இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இதில் முன்னாள் அதிபர் லுலா டா ஊழல் வழக்கில் சிறை சென்றதால், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாமல் போனது. இது ஜெயில் போல்சனரோவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையான லுலாடா, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.

அத்துடன் கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களினால் ஜெயீர் போல்சனரோ அரசு மீது மக்களிடையே எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதனால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், போல்சனரோ 49.1% வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலா டா சில்வா 50.9% வாக்குகள் பெற்று 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேசில் அதிபராக தேர்வானார். தொடர்ந்து தற்போது பிரேசில் நாட்டின் 39வது அதிபராக லுலா டா சில்வா பதவியேற்றார்.

Related Posts

Leave a Comment